இந்தியாவில் தங்கியிருந்த இலங்கை அகதிகளில் 452 பேர் தாயகம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை இந்தியாவின் பொதுத்துறை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இலங்கை இந்திய அரசாங்கங்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் என்பவற்றின் ஆதரவுடன் இவர்கள் 2015 – 2016ஆம் ஆண்டு காலப்பகுதியில் தாயகம் திரும்பியுள்ளனர்.
2014 – 2015ஆம் ஆண்டுகளில் 396 பேரே தாயகம் திரும்பியிருந்தனர்.
அகதிகள் தமது சுய விருப்பத்தின் பேரிலே தாய்நாட்டிற்கு திரும்புவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்;தி கொடுக்கப்படுவதாக இந்தியாவின் பொதுத்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.