கிழக்கு மாகாணத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
நேற்று (05) பொத்துவிலுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இவ்விடயம் தொடர்பில் எடுத்துக்கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 6068 வேலையில்லா பட்டதாரிகள் காணப்படுவதாகவும் இதில் இம்மாதம் 20 ஆம் திகதி 387 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் மிகுதி பட்டதாரிகளுக்கு எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மாகாண சபைக்குட்பட்ட அரச திணைக்களங்களில் நியமனம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுனரின் வேலைவாய்ப்பு வழங்கல் தொடர்பான திட்டத்துக்கமைவாக கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகளின் விடயம் தொடர்பில் கூறியபோதே ஜனாதிபதி மைத்திரிபால தனக்கு உறுதிமொழி வழங்கியதாக கிழக்கு ஆளுனர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.