டெங்கு நோய் தொற்று காரணமாக இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 38 ஆயிரத்து 419 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் மேல் மாகாணத்தை சேர்ந்த 5 ஆயிரத்து 131 பேர் அடங்குவதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் சுற்று சூழலை சுத்தமாக வைத்திருப்பதன் மூலமே டெங்கு நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்றும் அந்தப்பிரிவு வலியுறுத்தியுள்ளது.