தலைமன்னாரில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

365 0

arrest-51தலைமன்னார் படப்பிடி பகுதியில் சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுன் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

மன்னார் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இவரை கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் போதைப்பொருள் தடுப்பு பிரிவுற்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர் தலைமன்னார் கிராமத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.