இலங்கையருக்காக எதிர்ப்பு தெரிவித்தவருக்கு அபராதம்

366 0

201608170353275219_In-one-monthRs-65-lakhFinedCollections_SECVPFஇலங்கை புகலிட கோரிக்கையாளர் ஒருவரை நாடுகடத்துவதற்கு எதிராக வானூர்தியில் ஆர்ப்பாட்டம் நடத்திய அகதிகள் செயற்பாட்டாளருக்கு 3500 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் நீதவான் நீதிமன்றம் ஒன்றினால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக த கார்டியன் செய்திச்சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு இலங்கை புகலிட கோரிக்கையாளர் ஒருவரை அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து நாடுகடத்த முயற்சிக்கள் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது ஜெஸ்மின் பில்ப்ரோவ் என்ற அதிகள் செயற்பாட்டாளர் அதற்கு எதிராக வானூர்தியில் அமர மறுத்து எதிர்ப்பினை வெளியிட்டார்.

இதற்கு ஆதரவளிக்கும் வகையில் வானூர்தியில் இருந்த மேலும் சில பயணிகள் தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த அகதிகள் செயற்பாட்டாருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிந்த நிலையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.