நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் மண்சரிவு அபாயமுள்ள 2363 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையின்படி அதிக மண்சரிவு அபாயமுள்ள இடங்கள் இரத்தினபுரி மாவட்டத்தில் காணப்படுவதுடன் அதன் எண்ணிக்கை 393 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் 569 இடங்களும், காலி மாவட்டத்தில் 310, கேகாலை மாவட்டத்தில் 128,கொழும்பு தொடக்கம் கம்பஹா வரையிலான பகுதிகளில் 44 இடங்களும் அபாய வலயத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடங்களில் 6775 குடியிருப்புக்கள் காணப்படுவதுடன் மக்களை குடியிருப்புக்களில் இருந்து மீள்குடியமர்த்தும் வேலைத்திட்டங்கள் தற்போது இடம்பெற்றுவருவதுடன் இதற்கான ஆரம்பகட்ட நிர்மாணப்பணிகளுக்காக 295 மீள்குடியமர்த்தல் காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆரா ய்ச்சி மையம் குறிப்பிட்டுள்ளது.