குருணாகல் மாநாட்டைப் புறக்கணிப்பதாக மஹிந்த அணி அறிவிப்பு

342 0

mahinகுருணாகலில் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் மஹிந்த ஆதரவு உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளப் போவதில்லை என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்நிகழ்வில் கூட்டு எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 39 பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளப் போவதில்லையென மஹிந்த குழுவின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.