பேரறிஞர் அண்ணாவின் 49-வது நினைவுதினத்தினை முன்னிட்டு சின்ன காஞ்சீபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் உள்ள சிலைக்கு அ.தி.மு.க.-தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.
பேரறிஞர் அண்ணாவின் 49-வது நினைவுதினத்தினை முன்னிட்டு சின்ன காஞ்சீபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
அமைச்சர் பென்ஜமின், மாவட்ட கலெக்டர் பொன்னையா, காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் எம்பி., மரகதம் குமரவேல், நிர்வாகிகள் வி.சோமசுந்தரம், காஞ்சி பன்னீர் செல்வம், கே.யு.எஸ்.சோமசுந்தரம், வள்ளிநாயகம், தும்பவனம் ஜீவானந்தம், குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, ஆர்.டி.சேகர் மாவட்ட வருவாய் அலுவலர் நூர்முகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. தலைமையில் எழிலரசன் எம்எல்ஏ., நிர்வாகிகள் சன்பிராண்டு ஆறுமுகம், சிவிஎம்சேகர், பி.எம்.குமார், வி.எஸ்.ராமகிருஷ்ணன், சிறுவேடல் செல்வம், எஸ்.கே. பி.சீனுவாசன் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் அறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்தனர்.
பின்னர் காஞ்சீபுரம் காந்திசாலை பெரியார் நினைவுதூண் பகுதியில் இருந்து மவுன ஊர்வலமாக சென்று காஞ்சீபுரம் நகராட்சியில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காஞ்சீபுரம் நகர தே.மு.தி.க. சார்பில் நகர செயலாளர் சாட்சி.சண்முகசுந்தரம் தலைமையில் ஏராளமான கட்சியினர் அண்ணா நினைவில்லத்திற்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.