வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர சோல்வேனியா குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விஜயம் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை அமையும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலை அடுத்து இதுவே சோல்வேனியா குடியரசிற்கான முதல் விஜயம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு மூலோபாய கருத்துகளமான “எதிர்காலத்தை பாதுகாத்து கொள்வது” தொடர்பிலான கூட்டத்திற்கு பங்கேற்பதற்காகவே சோல்வேனியாவின் வெளிவிவகார அமைச்சர், சமரவீரவிற்கு இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த சந்திப்பில் சோல்வேனியாவின் ஜனாதிபதி ,பிரதமர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் தொழிநுட்ப அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை – சொல்வேனியாவிற்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு, அறிவியல் மற்றும் தொழிநுட்ப துறைகளில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.