டாஸ்மாக் கடையில் திருடிய 3 பேருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை

281 0

டாஸ்மாக் கடையில் திருடிய 3 பேருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி- குன்னூர் சாலையில் பெத்தட்டி சுங்கம் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இந்த கடையின் பூட்டை உடைத்து 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

இது குறித்து கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருடியது பெத்தட்டி பகுதியை சேர்ந்த வெள்ளையன் (29) மணிகண்டன் (38), காசிநாதன் (64), கனகராஜ்(36) மற்றொரு மணிகண்டன் (32) என்பது தெரிய வந்தது.

இவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கோத்தகிரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ஸ்ரீதர் குற்றவாளிகள் வெள்ளையன், மணிகண்டன், காசிநாதன் ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார் கனகராஜ், மற்றொரு மணிகண்டன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

Leave a comment