டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தின் பெயர் மீண்டும் மாற்றம்

303 0

டெல்லியில் உள்ள தமிழக அரசின் 2 விருந்தினர் இல்லங்களின் பெயர்களை மீண்டும் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

டெல்லியில் கவுடில்யா மார்க் பகுதியில் பழைய தமிழ்நாடு இல்லம் என்ற பெயரிலும், பீர் திக்ரஞ்சித் மார்க் பகுதியில் கூடுதல் தமிழ்நாடு இல்லம் என்ற பெயரிலும் தமிழக அரசின் விருந்தினர் இல்லங்கள் செயல்படுகின்றன. டெல்லிக்கு செல்லும் கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த இல்லங்களில் தங்குகின்றனர்.

இந்நிலையில், கவுடில்யா மார்க் பகுதியில் செயல்படும் விருந்தினர் இல்லத்துக்கு வைகை தமிழ் இல்லம் என்றும், பீர் திக்ரஞ்சித் மார்க் பகுதியில் செயல்படும் விருந்தினர் இல்லத்துக்கு பொதிகை தமிழ் இல்லம் எனவும் பெயர் மாற்றம் செய்து கவர்னரின் உத்தரவுப்படி தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது.

இந்த பெயர்மாற்றத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல நிர்வாகமும் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, மாற்றப்பட்ட பெயர்களை மீண்டும் மாற்றி தமிழக அரசு இன்று புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

புதிய அரசாணையின்படி, கவுடில்யா மார்க் பகுதியில் செயல்படும் விருந்தினர் இல்லத்துக்கு வைகை தமிழ்நாடு இல்லம் என்றும், பீர் திக்ரஞ்சித் மார்க் பகுதியில் செயல்படும் விருந்தினர் இல்லத்துக்கு பொதிகை தமிழ்நாடு இல்லம் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Leave a comment