மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலைக்கு புதிய நோயாளர் அறை ஒன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி சிறுநீரக நோய் தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது.
அந்த நோயாளர் அறைக்காக 03 இலட்சம் ருபா பெறுமதியான 30 கட்டில்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதன் பணிப்பாளர் அசேல இத்தவல கூறினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேண்டுகோளுக்கு இணங்க சிங்கப்பூர் தெண்டு நிறுவனம் ஒன்றினால் இவை வழங்கப்பட உள்ளன.
அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் வாகன தரிப்பிடம் அடுத்த வாரமளவில் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.