மண் சரிவு அபாயமுள்ள 2363 இடங்கள் அடையாளம் காணப்பட்டன

263 0

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மண் சரிவு அபாயமுள்ள 2363 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது. 

கள பரிசோதனைகளின் பின்னர் அச்சுறுத்தலான அந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

அந்த இடங்களில் இருக்கின்ற மக்களை வௌியேற்றி 293 இடங்களில் மிள் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண் சரிவு அபாயமுள்ள அதிக இடங்கள் இரத்தினபுரி மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றின் எண்ணிக்கை 946 என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.

மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 569 இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், காலி மாவட்டத்தில் 310 இடங்களும், கேகாலை மாவட்டத்தில் 122 இடங்களும் கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் 44 இடங்களும் மண்சரிவு அபாயமுள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதன்படி 6775 வீடுகள் மற்றும் கட்டிடங்களில் இருக்கின்ற மக்களை அங்கிருந்து வௌியேற்றியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.

Leave a comment