சட்டவிரோதமான முறையில் 242 சிகரட் பொதிகளை நாட்டுக்கு கொண்டு வந்த இரண்டு பேர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குவைட்டிலிருந்து வந்த 47 மற்றும் 27 வயதான இரண்டு இலங்கைப் பிரஜைகளே சம்பவத்தில் இன்று காலை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
242 பெட்டிகளுக்குள் 48400 சிகரட்டுக்கள் இருந்ததாக தெரிவித்துள்ள விமான நிலைய சுங்கப் பிரிவினர் அவற்றின் பெறுமதி சுமார் 24 இலட்சத்து 20,000 ரூபா என்று கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும் 300,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்ட பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டதாக விமான நிலைய சுங்கப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் மல்சிறி குணதிலக கூறினார்.