தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூலிற்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை வேட்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்
அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் கூட்டணி மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டமைக்கான ஆதாரங்கள் உள்ளதாக இரட்ணஜீவன் கூல் தெரிவித்திருக்கும் நிலையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு, யாழ்ப்பாணம் பலாலி வீதியில், பரமேஸ்வராப் பகுதியில் அமைந்துள்ள, கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற போது, இவ்வாறு கருத்து வெளியிட்டார்.