சுதந்திர தினத்தை முன்னிட்டு பொருட்கள் விலை குறைப்பு, 7 ஆம் திகதி வரை அமுல்

263 0

தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு அரிசி, பருப்பு உட்பட 7 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோ பாஸ்மதி அரிசி 120 ரூபாவுக்கும், வெள்ளைப் பச்சை அரிசி ஒரு கிலோ 60 ரூபாவுக்கும், உடைந்த அரிசி ஒரு கிலோ 59 ரூபாவுக்கும், பருப்பு ஒரு கிலோ 159 ரூபாவுக்கும், பயறு ஒரு கிலோ 195 ரூபாவுக்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 110 ரூபாவுக்கும், செத்தல் மிளகாய் ஒரு கிலோ 220 ரூபாவுக்கும் நாடுமுழுவதிலுமுள்ள சதொச விற்பனை நிலையங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சு அறித்துள்ளது.

இந்த விலை குறைப்பு நேற்று முன்தினம் (01) நள்ளிரவு முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீன் குறிப்பிட்டுள்ளார்

Leave a comment