ராஜபக்ஷர்களின் கறுப்புப்பணம்!

313 0

Yoshitha-_CIகடந்த ஆட்சியின் போது பணத்திற்கு அப்பால் இலஞ்சமாக பெற்றுக்கொள்ளப்பட்ட அசையா சொத்துக்கள் குறித்த விசாரணைகளை, நிதி மோசடி விசாரணை பிரிவு ஆரம்பித்துள்ளது.

கொழும்பு நகரின் முன்னணி ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் ஆடம்பர வீடுகளை (Apartments) நிர்மாணிப்பதற்கு நடவடிக்கையில் ஈடுபடும் நிறுவனங்களிடம் இலஞ்சம் பெறப்பட்டுள்ளது.

தரகு பணமாக அந்த ஹோட்டல் மற்றும் வீடுகளின் பகுதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக நிதி மோசடி விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.

அங்கு பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவின் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ள ஒரு வீட்டு தொகுதி குறைந்த பட்சம் 5 – 8 லட்ச அமெரிக்க டொலரின் கீழான சொகுசு வீடுகளாகும்.

அதற்கமைய கடந்த காலங்களில் கொழும்பு மற்றும் ததாசன்ன பிரதேசத்தில் சொகுசு வீடுகளை நிர்மாணித்த நிறுவனம் தொடர்பில் தகவல் ஆராய்வதற்காக நிதி மோசடி விசாரணை பிரிவு தீர்மானித்துள்ளது. அத்துடன் தற்போது வரையில் காலி முகத்திடலின் முன்னால் நிர்மாணிக்கப்படும் வீடுகளுக்காக முன்கூட்டியே பணம் செலுத்திய கிட்டத்தட்ட 325 பேர் தொடர்பில் தகவல் ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் காணி மற்றும் எந்தவொரு பணமும் முதலீடு செய்யாமல் நிர்மாணிப்பு திட்டத்திற்காக முன்கூட்டியே பணம் பெற்று பாரிய நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட பல நிறுவனங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நிதி மோசடி விசாரணை பிரிவு தீர்மானித்துள்ளது.

இவ்வாறான நிர்மாணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பலர் கடந்த காலங்களில் ராஜபக்சர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த விசாரணை நடவடிக்கைகளில் குறித்த திட்டத்தில் ராஜபக்சர்களின் பணம் உள்ளதா என ஆராய்ந்து பார்க்கப்படவுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் ஏற்படும் அவசியத்திற்கமைய குறித்த நிறுவனங்களின் உரிமையாளர்களை நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.