மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக போராட்டம்

632 0

arjuna mahendran_CIமத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக இன்றைய தினம் பாரியளவில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. கூட்டு எதிர்க்கட்சியினரால் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கிக்கு அருகாமையில் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இன்றைய தினம் முற்பகல் 10.30 அளவில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் இதில் அனைத்து கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளதாகவும தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 30 ம் திகதி பதவிக் காலம் முடிவடையும் அர்ஜூன் மகேந்திரனின் பதவிக் காலத்தை நீடிக்கக் கூடாது, பிணை முறி மோசடி குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் கோரி இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
இன்றைய தினம் மட்டுமன்றி எதிர்வரும் நாட்களிலும் இந்தப்போராட்டம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

Leave a comment