பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. கூட்டணி சார்பில் பந்த் அல்லது உண்ணாவிரதம் !

347 0

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. கூட்டணி சார்பில் பந்த் அல்லது உண்ணாவிரதம் குறித்து வரும் 6-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் கடந்த திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர்.

அப்போது மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

அடுத்த கட்ட போராட்டம் குறித்து 6-ந்தேதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முடிவு செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதன்படி 6-ந்தேதி மாலை 5 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சித்தலைவர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்டமாக என்ன மாதிரியான போராட்டத்தை அறிவிக்கலாம் என முடிவெடுக்க உள்ளனர்.

‘பந்த்’ (பொது வேலை நிறுத்தம்) நடத்த முடிவெடுக்கலாம் அல்லது தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

இதற்காக கூட்டணி கட்சிகளின் ஒருமித்த முடிவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு போராட்ட தேதி அறிவிக்கப்படும் என கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment