சென்னை துறைமுகத்தில் ரூ.9 கோடி கடத்தல் சிகரெட் பறிமுதல்

270 0

ஈரான் நாட்டில் இருந்து ஜிப்சம் மூட்டைகளில் பதுக்கி அனுப்பி வைக்கப்பட்ட 9 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் பெட்டிகளை சென்னை துறைமுக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சிகரெட் பாக்கெட்களின் வெளிப்புறத்தில் 85 சதவீதம் இடத்தில் புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் புற்றுநோய் பற்றிய எச்சரிக்கை விளம்பரங்கள் இடம்பெற வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது. இந்த விதிமுறை பின்பற்றாமல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு வகையான சிகரெட்டுகள் இங்கு விற்பனையில் கொடிகட்டி பறக்கிறது.
குறிப்பாக, இந்தோனேசியா உள்ளிட்ட சில நாடுகளில் தயாரிக்கப்படும் ஒருவகை சிகரெட்டில் கிராம்பு எண்ணைய் கலந்திருப்பதால் அந்த நறுமணத்தை புகைக்க இளையதலைமுறையினர் அதிகம் விரும்புகின்றனர்.
இந்நிலையில், ஈரான் நாட்டில் இருந்து ஜிப்சம் (பொம்மைகள் மற்றும் அலங்கார மேற்கூரை தயாரிக்க பயன்படும் சுண்ணாம்பு) மூட்டைகளில் பதுக்கி அனுப்பி வைக்கப்பட்ட 9 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் பெட்டிகளை சென்னை துறைமுகத்தை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இவற்றை இறக்குமதி செய்த தூத்துக்குடி நிறுவனம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

Leave a comment