மனிதர்களை போல் ‘ஹலோ’, ‘பை-பை’ சொல்லும் டால்பின்

293 0

டால்பின்களுக்கு முறையான பயிற்சி அளித்தால், அவற்றை ஹலோ’ மற்றும் ‘பை பை’ போன்ற வார்த்தைகளை கூற வைக்க முடியும் என விலங்கின ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர் பயிற்சியின் மூலம் கிளிகளை மனிதர்களை போலபேச வைக்க முடியும். ஆனால் மனிதர்களை போல மற்ற பாலூட்டி விலங்குகள் பேசுவது என்பது மிகவும் அரிது. இந்நிலையில், டால்பின்களை மனிதர்களை போல ஒலி எழுப்புவதற்கு பயிற்றுவிக்க முடியும் என சில ஆய்வாளர்களின் கண்டுபிடித்துள்ளனர். தற்பொழுது கில்லர் வகை திமிங்கலம் ஒன்று மனிதர்களை போல ‘ஹலோ, பை-பை சொல்லி அசத்தி வருகிறது.
இதுகுறித்து இங்கிலாந்தில் உள்ள செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தின் இணை ஆராய்ச்சியாளரான டாக்டர் ஜோசப் கால் கூறியதாவது, “டால்பின்கள் மற்றும் திமிங்கலங்கள் மனிதர்களை போல தான் கேட்கும் ஒலியை அப்படி கூற முயலும் சில உயிரினங்களாகும். பிரான்சின் ஆன்டிபெஸ் பகுதியில் செயல்பட்டுவரும் நீர்வாழ் உயிரினங்களின் கண்காட்சி சாலையில் உள்ள ‘விக்கி’ என்ற பெண் திமிங்கலம் மனிதர்களை போல பேச முயல்கிறது. இதற்கு தன்னுடைய மூக்குப்பகுதியில் இருக்கும் பகுதியை இந்த திமிங்கலம் பயன்படுத்துகிறது. ‘ஹலோ’, ‘அமி’, ‘ஒன்’, ‘டூ’, ‘த்ரி’ போன்ற வார்த்தைகளையும் விக்கி பேசி வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.
வருங்காலத்தில் ‘விக்கி’யுடன் அடிப்படை கலந்துரையாடல் என்பது சாத்தியப்படும் என ஸ்பெயினிலுள்ள மாட்ரிட் பல்கலைகழக இணை ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜோஸ் ஆப்ராம்சன் தெரிவித்துள்ளார். இதனிடையே விக்கி திமிங்கலம் ஹலோ, பை-பை முதலிய வார்த்தைகளை பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Leave a comment