ஹாங்காங்: 2-ம் உலகப்போரின் போது அமெரிக்காவால் போடப்பட்டு செயலிழந்த குண்டு கண்டுபிடிப்பு!

364 0

ஹாங்காங்கில் இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்க ராணுவத்தினரால் ஜப்பான் வீரர்கள் மீது போடப்பட்டு செயலிழந்த குண்டு சுமார் 60 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போரில் பல உலக நாடுகள் குழுவாக பிரிந்து மோதின. பல உயிர்களை இந்த போர்கள் காவு வாங்கின. இதிலும் இரண்டாவது உலகப்போரில் மிகவும் அபாயகரமான குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. இதில் எதிரி நாடுகளில் போடப்பட்ட பல குண்டுகள் வெடிக்காமல் இன்னும் பூமிக்கு அடியில் இருக்கிறது.

இந்நிலையில், ஹாங்காங்கில் இரண்டாம் உலகப்போரின்போது போடப்பட்டு செயலிழந்த ஒரு வெடிகுண்டு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் எடை சுமார் 1000 பவுண்ட்கள் ஆகும். மிகவும் அபாயகரமான இந்த குண்டு ஒரு சில காரணங்களால் வெடிக்காமல் போயுள்ளது. இதனால் சுமார் 60 ஆண்டுகளாக பூமிக்கு அடியில் அப்படியே புதைந்து இருந்துள்ளது.

இரண்டாம் உலகப்போரின்போது ஹாங்காங் பகுதியில் ஜப்பானை சேர்ந்த ராணுவ வீரர்கள் இருந்துள்ளனர். அவர்களை தாக்க அமெரிக்கா ராணுவ விமானங்கள் இந்த குண்டை போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது அமெரிக்க ராணுவத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டாகும்.

அங்கு இருக்கும் கட்டிடம் கட்டும் நிறுவனம் ஒன்று கட்டிடம் கட்ட குழி தோண்டிய போது அந்த குண்டை கண்டுபிடித்துள்ளது. இதை 40 பணியாளர்கள் 3 நாட்களாக கவனமாக தோண்டி எடுத்துள்ளனர்.

ஏற்கனவே அங்கு இதேபோல ஒரு குண்டு எடுக்கப்பட்டது. இன்னும் அங்கு நிறைய குண்டுகள் இருக்க வாய்ப்புள்ள்ளதாக ஹாங்காங் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment