இராணுவ வாகனத்தில் மோதுண்டு பெண் பலி

334 0

i3குருணாகல் பிரதான வீதியின் தம்புத்தேகம பிரதேசத்தில் இராணுவ வாகனத்தில் மோதுண்டு பெண் உயிரிழந்துள்ளார்.நேற்றிரவு பத்து மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 71 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நவகத்தேகமவைச் சேர்ந்த குறித்த பெண் மற்றுமொரு குழுவினருடன் அனுராதபுரத்திற்கு வழிபாடுகளுக்காக சென்றிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இந்த பெண் சென்ற வாகனம் குறித்த பகுதியில் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டிருந்த போது வீதியை கடந்த போது பெண் விபத்துக்குள்ளாகியுள்ளார்.