யாழில் திருமணமாகி ஆறு மாதங்களில் உயிரிழந்த இளம் பெண்!!

289 0

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப்  பெண்ணொருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

கரவெட்டி இமயாணன் பகுதியை சேர்ந்த 22 வயதான மனோரஞ்சன் சிந்துஜா என்ற பெண்னே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமணம் நடந்து ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி இரவு சாப்பாடு செய்வதற்காக மண்ணெண்ணை அடுப்பை பற்றவைத்துள்ளார். இதன்போது குறித்த பெண் மீது தீப் பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment