யானை தாக்கி விகாராதிபதி வைத்தியசாலையில் அனுமதி

289 0

பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரர் யானைக்கு உணவு கொடுக்க முற்பட்டபோது ஏற்பட்ட விபத்து காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போது களுபோவில வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பெல்லன்வில விமலரத்ன தேரர் இன்று (02) காலை மியன் குமரா என்ற யானைக்கு உணவு கொடுக்கும் போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பெல்லன்வில விமலரத்ன தேரரது இடுப்பு எலும்பு உடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Leave a comment