இலஞ்சம் வழங்க முயற்சித்த குற்றச்சாட்டில் கடந்த 8 வருடங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயோன் முஸ்தபா சட்டத்தரணி ஊடாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
2010 ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக செயற்படுவதற்காக முன்னாள் மேயர் முஸம்மிலுக்கு 42 இலட்சம் இலஞ்சம் வழங்க முயற்சித்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயோன் முஸ்தபா மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
அவருக்கெதிரான வழக்கு கொழும்பு மேலநீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயோன் முஸ்தபா சட்டத்தரணி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது