70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம், நேற்றுத் தொடக்கம் நடை முறைக்கு வரும் வகையில் 7 அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் குறைத்துள்ளது. எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் இது நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஸ்மதி அரிசி – 120 ரூபா, வெள்ளைப் பச்சையரிசி 60 ரூபா, உடைந்த அரிசி 59 ரூபா, பருப்பு 54.50 ரூபா, பயறு 97.50 ரூபா, பெரிய வெங்காயம் 55 ரூபா, துண்டு மிளகாய் 110 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.