யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவபீடத்தால் ஆறு ஆண்டுகளின் பின்னர் மீண்டும் மாபெரும் மருத்துவக் கண்காட்சி ஏப்ரல் மாதம் நடத்தப்படவுள்ளது என்று மருத்துவபீடக் கண்காட்சி ஒருங்கிணைப்புக் குழுவினால் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் மருத்துவக் கண்காட்சி நடத்தப்படவுள்ளது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சுடன் இணைந்து, உள்நாட்டு – வெளிநாட்டு மருத்துவபீட மாணவர் சங்கங்கள் மற்றும் இவலூஷன் பிறைவட் லிமிட்டெட் பங்களிப்புடன் இந்தக் கண்காட்சி நடத்தப்படவுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரையில் 4 நாள்கள் இடம்பெறவுள்ளது.- என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.