நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும்: வைகோ

263 0

திராவிடர் கழகம் நடத்தும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு ம.தி.மு.க. முழுமையான ஆதரவை அளிப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்த ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ நுழைவுத் தேர்வில் மாநில கல்வித் திட்ட அடிப்படையில் வினாத் தாள்கள் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால், மூன்று நாட்களுக் குப் பிறகு அதனை மறுத்து மத்திய சி.பி.எஸ்.சி. கல்வித் திட்ட அடிப்படையில் வினாத்தாள் அமைக்கப்படும் என்று நடுவண் அரசு அறிவித்துள்ளது.

வருகிற மே 6 அன்று நீட் தேர்வு நடைபெறுவதாக நாள் குறிக்கப்பட்டுவிட்டது. இந்தச் சூழலில் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் கூட்டிய ம.தி.மு.க., உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற கூட் டத்தில் எடுக்கப்பட்ட முடி வின்படி வருகிற 5-ந்தேதி அன்று காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ம.தி.மு.க., முழுமையான ஆதரவை அளிக்கிறது.

கழகத் தோழர்கள், நிர்வாகிகள், குறிப்பாக மாணவர் அணி, மறுமலர்ச்சி மாணவர் மன்ற தோழர்கள் பெருமளவில் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் தி.மு.க. பங்கேற்கும் என்று அக்கட்சி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Leave a comment