பாகிஸ்தானில் மூத்த மந்திரி-மனைவி மர்ம மரணம்: பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்தனர்

301 0

பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் பூட்டிய வீட்டில் மூத்த மந்திரியான பிஜாரானி மற்றும் அவரது மனைவியின் குண்டுகள் துளைத்த உடல்களை போலீசார் மீட்டுள்ளனர். 

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில்  திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை மந்திரியாக பதவி வகித்து வந்தவர் மிர் ஹசார் கான் பிஜாரானி. பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த அவரது வீடு கராச்சியில் உள்ளது.
இந்நிலையில், நேற்று காலை அவரது வீட்டின் கதவு பூட்டியே கிடந்தது. அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையறிந்து அங்கு வந்த போலீசார் கதவை உடைத்து திறந்தனர்.
வீட்டின் உள்ளே மந்திரி மற்றும் அவரது மனைவி பரிஹா ரசாக் இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்களின் உடல்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்தன. இருவரது உடல்களிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தன.
இருவரது உடல்களையும் கைப்பற்றிய போலீசார், அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், வீட்டின் தாழ்ப்பாள் உட்புறம் பூட்டப்பட்டிருப்பதால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிகிறது. வெளியாட்கள் சுட்டுக் கொன்றார்களா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம் என கூறினர்.

Leave a comment