பிரித்தானியா நாட்டில் நீச்சல் குளத்தில் 3 வயது குழந்தை மூழ்கி பலியானது தொடர்பாக ஹொட்டல் உரிமையாளருக்கு நீதிமன்றம் ரூ.1.92 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள Lancashire நகரில் டால்மெனி என்ற நட்சத்திர ஹொட்டல் ஒன்று இயங்கி வருகிறது.
இந்நிலையில், ஸ்கொட்லாந்தை சேர்ந்த பெற்றோர் தங்களது 6 மற்றும் 3 வயது குழந்தைகளுடன் இந்த ஹொட்டலுக்கு சென்றுள்ளனர்.ஹொட்டலின் பின்புறத்தில் உள்ள நீச்சல் குளம் ஒன்றில் குழந்தைகள் இருவரும் நீச்சல் அடித்து விளையாடியுள்ளனர்.
அப்போது, ஜேனி பெல் என்ற 3 வயது குழந்தை ஆழமான இடத்திற்கு சென்றதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.சுமார் 2 நிமிடங்கள் போராடியும் குழந்தையை யாரும் மீட்க வில்லை. பின்னர், ஹொட்டல் பணியாளர்கள் விரைந்து வந்து மூழ்கிய குழந்தையை கரைக்கு இழுத்து வந்தனர்.
எனினும், குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது.ஹொட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என குற்றம் சாட்டிய குழந்தையின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.அப்போது, நீச்சல் குளத்தை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என ஹொட்டல் உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து 3 குழந்தை இறப்பதற்கு காரணமான ஹொட்டல் நிர்வாகம் பெற்றோருக்கு 1,00,000 பவுண்ட்(1,92,57,083 இலங்கை ரூபாய்) அபராதம் விதிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.