உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தற்காலிக அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, வாகன சாரதி அனுமதிப்பத்திரம், முதியோர், ஓய்வு மற்றும் மத அடையாள அட்டைகள் ஊடாக வாக்களிக்க அடையாளத்தை உறுதிப்படுத்த முடியும்.
இதுபோன்ற எந்த அடையாள அட்டைகளும் அற்ற வாக்காளர்கள் தற்காலிக அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு கால அவகாசம் வழங்கியிருந்தது.
இதேவேளை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்ளாத தபால் மூல வாக்காளர்கள் இன்றைய தினமும் தமது வாக்குப் பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.