அமைச்சர்களான பைஸர், கிரியெல்ல ஆகியோரின் அறிவிப்பு குறித்து இன்று தீர்மானம்- மஹிந்த

237 0

உள்ளுராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பில் அமைச்சர்களான லக்ஷமன் கிரியெல்லவும், பைஸர் முஸ்தபாவும் முன்வைத்த அறிவிப்புக்கள் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கான தீர்வு இன்று (02) நடைபெறவுள்ள கட்சிச் செயலாளர்களின் கலந்துரையாடலில் முன்வைத்து பெறப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது பிரதமர் எனவும் எனவே ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கும் உள்ளுராட்சி சபைகளுக்கே நிதி ஒதுக்கீடுகள் இடம்பெறும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.

இதேவேளை, தான் உள்ளுராட்சி சபைகளுக்கான அமைச்சர் எனவும் தனது அமைச்சிலிருந்து நிதி ஒதுக்கப்பட வேண்டுமானால், உள்ளுராட்சி சபை ஸ்ரீ ல.சு.கட்சியின் ஆதிக்கத்தில் இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளதாகவும் முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பிலேயே இன்று தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave a comment