கள்ளக் காதலி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவரை தேடி பொலிஸார் வலை வீச்சு

279 0
பெண் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்காக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சேவையில் இருந்து தப்பிச் சென்றுள்ள இராணுவ வீரர் ஒருவரே சந்தேகநபர் என்றும், தனது கள்ளக் காதலி மீதே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

நேற்று இரவு குறித்த பெண்ணின் வீட்டுக்கு அருகில் மறைந்திருந்து பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ள பெண் கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

24 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.

Leave a comment