மட்டக்களப்பில் விபத்து; ஒருவர் காயம்

284 0

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுதாவளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று (01) இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

மேற்குறித்த பகுதியில், மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில், மோட்டார் சைக்கிளில் சென்ற 33 வயதுடைய ந.யோகம்பரநாதன் என்பவரே படுகாயமடைந்தவராவார்.இதேவேளை இவ்வீதி விபத்துக் குறித்து விசாரணைகள் நடைபெறுகிறது.

Leave a comment