4 வாள்களை தம்வசம் வைத்திருந்த நபரொருவர் அல்பிட்டிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது அல்பிட்டிய, நிகஹத்தன்ன பிரதேசத்தின் வீடொன்றிலிருந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வீடு கொலை சம்பவம் ஒன்றில் குற்றஞ்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் ஒருவரினுடையது என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக அல்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.