தமிழகத்தில் 5 ஆண்டுகளில் போலீஸ் லாக்-அப்பில் 157 விசாரணை கைதிகள் மரணம்

239 0

தமிழகத்தில் கடந்த 2012-ல் இருந்து 2016 வரை போலீஸ் லாக்-அப்பில் 157 விசாரணை கைதிகள் இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் போலீஸ் நிலையங்களில் விசாரணை கைதிகள் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாகி உயிரிழக்கும் சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் கோரிக்கை விடுத்து இருந்தது. இதை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ந்தேதி நாடு முழுவதும் உள்ள ஐகோர்ட்டுகளுக்கு ஒரு உத்தரவிட்டது.

அதில் 2012-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுவரை அந்தந்த மாநிலங்களில் நடந்த போலீஸ் ‘லாக்அப்’ மரணம் குறித்து விவரங்களை கேட்டு பெற்று நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்து இருந்தது.

கடந்த ஜனவரி 29-ந்தேதி இது தொடர்பான விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் தலைமையிலான அமர்வு முன் நடந்தது. அப்போது தமிழக அரசின் உள்துறை செயலாளர் சார்பில் லாக்-அப் மரணம் தொடர்பான மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கடந்த 2012-ல் இருந்து 2016 வரை 5 ஆண்டுகளில் தமிழக போலீஸ் நிலையங்களில் லாக்-அப்பில் 157 விசாரணை கைதிகள் இறந்திருக்கிறார்கள். இதில் 134 மரணங்கள் மாஜிஸ் திரேட்டு விசாரணையின் அடிப்படையில் முடித்து வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment