ஓநாய்க்கு டிரம்பின் பெயரை சூட்டிய கொசவா விவசாயி

248 0

தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கொசவாவைச் சேர்ந்த விவசாயி தனது வளர்ப்பு ஓநாய்க்கு டிரம்பின் பெயரை சூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கொசவாவைச் சேர்ந்த ரெக்ஸ்கா என்ற விவசாயி நான்கு ஓநாய்களை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறார். வனப்பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்த ஓநாய்களில் ஒன்றிற்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் பெயரை சூட்டியுள்ளார். இது அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய ரெக்ஸ்கா, ‘அமெரிக்க பிரதமர் டிரம்ப் அதிக ஆற்றல் கொண்டவர். மிகவும் தைரியமானவர். அவரின் அனைத்து குணங்களும் பிடித்ததால் தான் எனது ஓநாய்க்கு டிரம்ப்பின் பெயரை சூட்டினேன். எனது ஓநாயும் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படும். அதனுடையை செயல்கள் டிரம்பை ஒத்திருக்கும்’ என கூறினார்.

கொசவா நாட்டில் உள்ள பலர் அமெரிக்க அதிபர் கிலிண்டன் மற்றும் ஜார்ஜ் புஷ் போன்ற தலைவர்களின் பெயர்களை தங்கள் மகனுக்கு வைத்துள்ளனர். செர்பியா நாட்டின் பிடியிலிருந்து கொசவாவிற்கு சுதந்திரம் வாங்கித்தர அமெரிக்க அரசு மிகவும் உதவியது. அந்த நன்றிக்கடனை செலுத்தும் வகையில் இந்த பெயர் வைத்ததாக ரெக்ஸ்கா தெரிவித்தார்.

Leave a comment