விருதுநகரில் 1,250 குரோஸ் கருந்திரி பறிமுதல்

382 0

201609031002259593_virudhunagar-1250-Karuntiri-Croes-seized-van-driver-arrest_SECVPFவேனில் அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 1,250 குரோஸ் கருந்திரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் ஆவுடையார்புரம் பகுதியில் வச்சக்காரப்பட்டி போலீசார் வாகன சோதனை நடத்தினர். அங்கு வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அந்த வேனில் அனுமதியின்றி கருந்திரிகள் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. இது குறித்து வேனை ஓட்டி வந்த சங்கரலிங்காபுரம் மணிகண்டன் (21) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

சங்கரலிங்காபுரத்தை சேர்ந்த ராமசாமி (58) என்பவர் கருந்திரியை கொடுத்ததாக டிரைவர் மணிகண்டன் தெரிவித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வேனில் இருந்த 1,250 குரோஸ் கருந்திரியை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து வேன் டிரைவர் மணிகண்டனும் கைது செய்யப்பட்டார். அவரிடம் கருந்திரி கொடுத்ததாக ராமசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.