முன்னாள் ஜனாதிபதியின் பிரஜாவுரிமையை பறிப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. அது தொடர்பில் பாராளுமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும். எனினும் அரசாங்கமும் இது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட செவ்வியில் தெரிவித்தார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதியுடன் எனக்கு எந்தவொரு டீலும் இல்லை. மஹிந்த ராஜபக் ஷவுக்கும் எனக்கும் டீல் இருப்பதாக கூறுவது ஆச்சரியமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி தேர்தலை அடிப்படையாக கொண்டு சமகால அரசியல் நிலவரம் குறித்து வழங்கிய விசேட செவ்வியின் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
செவ்வியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாவது,
பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஆணைக்குழுவினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிவில் உரிமை மற்றும் பிராஜவுரிமையை நீக்க வேண்டும் என்றும் அது வாழ்நாள் முழுவதும் பாதிப்பு செலுத்தும் வகையில் அரசியலமைப்பினை திருத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. பாராளுமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும். எனினும் அரசாங்கமும் இது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதியுடன் எனக்கு எந்தவொரு டீலும் இல்லை. முன்னாள் ஜனாதிபதிக்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கும டீல் இருப்பதாக கூறுவது ஆச்சரியமாக உள்ளது. மஹிந்த ராஜபக்ஷவை நாம் ஜனாதிபதியாக்க முனையவில்லை. அப்படி இருக்கும் போது எமக்கு அவருடன் டீல் வைப்பதில் பிரயோசனம் இல்லை.
எனினும் அரசியலுக்கு அப்பால் எனக்கும் அவருக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. என்றாலும் பொதுவாக அனைத்து அரசியல்வாதிகளுடன் நான் தொடர்பு வைத்துக்கொள்வது வழக்கமாகும்.
முன்னைய ஆட்சியின் மோசடிகளை விசாரணை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுப்போம். மேலும் வழக்குகளை துரிதப்படுத்த விசேட மேல்நீதிமன்றமொன்றை அமைப்போம்.
ஜக்கிய தேசியக் கட்சிக்கு விமர்சனம் செய்வதனை நாடகமென நான் கூறவில்லை. எனினும் தேர்தல் என்ற படியினால் தமது கட்சியின் தனித்துவத்தை பாதுகாக்க அனைவரும் முயற்சி செய்வார்கள்.
சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியை தாக்கி பேசட்டும். அதற்காக நாம் பதிலடி கொடுக்கமாட்டோம். அவ்வாறு செய்வதில் பிரயோசனமும் கிடையாது