வங்காளதேசத்தில் ஜமாத்-இ- இஸ்லாமி கட்சி தலைவருக்கு தூக்கு தண்டனை

341 0

201609031113502191_Bangladesh-JI-leader-set-to-be-hanged_SECVPFவங்காளதேசத்தில் ஜமாத்-இ- இஸ்லாமி கட்சி தலைவருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் அறிவித்துள்ளது. வங்காள தேசத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தலைவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
வங்காள தேசத்தில் உள்ள எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஐமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் குவாசிம் அலி. இவர் மிகப்பெரும் கோடீசுவரர்.

பாகிஸ்தானில் இருந்து பிரிந்த போது கடந்த 1971-ம் ஆண்டு வங்காள தேச சுதந்திர போராட்டத்தின் போது போர்க்குற்றம் இழைத்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. எனவே அவர் மீது சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு அவர் குற்றவாளி என அறிவித்து தூக்கு தண்டனை விதித்தது. அதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். அங்கும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டு தண்டனை உறுதி ஆனது.

எனவே அவர் காசிம்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் இறுதியாக ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்து அதன் மூலம் தண்டனை குறைய வாய்ப்பு உள்ளது. ஆனால் குவாசிம் அலி ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோர விரும்பவில்லை என நேற்று அறிவித்து விட்டார். எனவே அவர் தூக்கில் போடப்படுவது உறுதியாகி விட்டது. ஆனால் அதற்கான தேதி இன்னும் முடிவாக வில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.