மன்னார் மாவட்டத்தில் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் காணப்படுகின்றன. யுத்தத்தினால் பாதீக்கப்பட்ட அதிகமான பெண்கள் இந்த மாவட்டத்தில் காணப்படுகின்றார்கள் .அவர்கள் யுத்தத்தினால் அதிகம் பாதீக்கப்பட்டவர்கள்.எனவே .ஐக்கிய தேசிய முன்னனி கொண்டு வந்த முறை மூலமாகத்தான் அணைத்து பெண்களும் போட்டியிடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
எதிர்வரும் 10 ஆம் திகதி இடம் பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக மன்னார் மாவட்டத்தில் பிரதேச சபைகள் மற்றும் நகர சபை ஆகியவற்றிற்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (31) புதன் கிழமை காலை 11 மணியளவில் மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் இடம் பெற்றது.இதன் போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இடம் பெற்ற ஜனாதிபதித்தேர்தல்,அதனைத்தொடர்ந்து இடம் பெற்ற பாராளுமன்ற தேர்தல் ஆகிய இரண்டிற்கும் மன்னார் மாவட்டத்திற்கு வந்து உங்களுடைய உதவியுடன் நாங்கள் இந்த ஆட்சியினை நிறுவியுள்ளோம்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி அவர்கள் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் எமது அமைச்சரவை எங்களுக்கும்,ஐக்கிய தேசியக்கட்சிக்கும் பங்கு கொள்ளக்கூடிய நிலமை ஏற்பட்டது.
அதனூடாக ஒரு தேசிய அரசாங்கத்தினை நாங்கள் ஆரம்பித்தோம்.அதனூடாக நாட்டின் ஆட்சியினை நாங்கள் பொறுப்பெடுத்தோம்.
இது தான் எமது ஐக்கிய தேசிய முன்னனியாகும்.எமது ஐக்கிய தேசியக்கட்சி ஐக்கிய தேசிய முன்னனியூடாகத்தான் பெண்களுக்கும் ஒரு உரிமையினையும்,அந்தஸ்தினையும் வழங்கி இருக்கின்றோம்.
வேட்பாளர்கள் என்ற ரீதியில் நாங்கள் அதிகமான பெண் வேட்பாளர்களை பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
பிரதேச சபைகள் அதே போன்று நகரசபை ஆகியவற்றின் ஆகக்குறைந்தது 25 சதவீதமான பெண்களை நியமிப்பதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம்.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் பெண்களை அடிப்படையாகக் கொண்ட குடும்பங்கள் காணப்படுகின்றன.யுத்தத்தினால் பாதீக்கப்பட்ட அதிகமான பெண்கள் இந்த மாவட்டத்தில் காணப்படுகின்றார்கள்.
அவர்கள் யுத்தத்தினால் அதிகம் பாதீக்கப்பட்டவர்கள்.
அதே போன்று முஸ்ஸீம் பெண்களும் காணப்படுகின்றனர்.ஐக்கிய தேசிய முன்னனி கொண்டு வந்த முறை மூலமாகத்தான் அணைத்து பெண்களும் போட்டியிடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த அனைத்து திட்டங்களையும் எமது ஐக்கிய தேசிய முன்னனியே முன்னேடுத்துள்ளது.எமது நாட்டிலே ஒற்றுமையினை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு ஜனாதிபதியுடன் கை கோர்த்ததினூடாக அந்த சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது.
ஆனால் மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்தில் அந்த ஒற்றுமை எமது நாட்டில் காணப்படவில்லை.ஆனால் எமது ஐக்கிய தேசிய முன்னனியில் தமிழ்,முஸ்ஸீம்,சிங்கள, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதன் காரணத்தினாலேயே இந்த நாட்டிலே சமாதானத்தை கொண்டு வரக்கூடியதாக இருந்தது.
நாங்கள் இலங்கையர் என்ற அடிப்படையில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.உங்களது பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் இருக்கின்றார்கள்.
தமிழ்,முஸ்ஸீம்,சிங்களவர்கள் அனைவரும் ஒன்று பட்டு வாழக்கூடிய ஒரு நிலமையினை நாங்கள் ஏற்படுத்தி இருக்கின்றோம்.அதனை இந்த மன்னார் மாவட்டத்திலும் காணக்கூடியதாக இருக்கின்றது.
இங்கு அனைத்து மக்களும் சமாதானமாக ஐக்கியத்துடன் வாழ்கின்றார்கள்.இவர்கள் தான் யுத்தத்தினால் அதிகம் பாதீக்கப்பட்ட மக்கள்.
அனைத்து சமயங்களிலும் உள்ள தலைவர்களை உள்ளடக்கியதினால் தான் ஐக்கிய தேசிய கட்சியினாடாக நல்ல நிலமையை கொண்டு வந்துள்ளோம்.ஐக்கிய தேசிய முன்னனியிலே தான் அனைத்து கட்சிகளும் ஒன்றினைந்து செயல்படுகின்றது.
எமது நாட்டின் ஒற்றுமையினை சமாதானத்தினையும் ஏற்படுத்த ஐக்கிய தேசியக்கட்சிக்கு உங்களின் வாக்குகளை வழங்குமாறு நான் வேண்டி நிற்கின்றேன்.
இன்று எமக்கு காணப்படுகின்றது ஒரு அமைதியான சமூகம்.எமது கருத்துக்களை எவ்வித பயமும் இன்றி முன்வைக்கக் கூடிய நிலமை, அதே போன்று எமது தனிப்பட்ட அரசியல் கருத்துக்களைக்கூட கூட முன்வைக்கக்கூடிய நிலமையை ஏற்படுத்தியுள்ளோம்.
நாங்கள் எமது நாட்டை பொறுப்பெடுத்த போது எமது நாடு கடன் சுமையால் மிகவும் நொந்து போய் காணப்பட்டது.
கடன்களை மீள் செலுத்த அரசாங்கத்தின் வருமானம் மிகவும் குறைவானதாக காணப்பட்டது.ஆனால் எந்த பயமும் இன்றி சவால்களை முன்னெடுத்து எமது வருமானத்தை நாங்கள் அதிகரித்தோம்.
ஆனால் இன்று எமது அரசாங்கத்தின் வருமானத்தினூடாக கடனை மீள செலுத்தக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
அப்படியான நிலை ஏற்படாது விட்டால் கடன் எடுப்பது,மீட்பதற்கான என்ற சூழ்நிலை ஏற்படும்.இப்போது ஒரு வியாபாரத்தை பார்க்கின்ற போது ஒரு கடனை எடுக்கின்றார்கள்.மற்றைய கடனை கடனை கொடுப்பதற்காக.இந்த நிலமை தான் காணப்படுகின்றது.எனவே எமது பொருளாதாரத்தை நாம் கட்டி எழுப்ப வேண்டும்.
15 பில்லியன் ரூபாய் ஏற்றுமதி ஊடாக வருமானத்தை ஈட்டக்கூடிய ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம் 2017 ஆம் ஆண்டு நிகழ்ந்துள்ளது.
எமது நாட்டில் பணம் இருக்கின்றது.எனவே அபிவிருத்திகளை ஆராம்பிக்க வேண்டும்.
ஏற்றுமதிகளை நாங்கள் ஊக்குவிக்க வேண்டும்.அதனூடாக எமது வருமானம் அதிகரிக்கக்கூடிய நிலை ஏற்படும்.இந்த அனைத்து விடையங்களையும் செய்யக்குடிய நிலைமை காணப்பட்டது ஐக்கிய தேசியக்கட்சி இந்த ஆட்சியினை முன்னெடுத்து செல்வதினாலேயே.
எமது கிராமங்களை அபிவிருத்தி செய்ய ஐக்கிய தேசியக்கட்சிக்கு உங்களின் வாக்குகளை வழங்க வேண்டும்.இந்த நாட்டை கட்டி எழுப்ப வேண்டும் என்ற நோக்கம் எங்களிடம் தான் காணப்படுகின்றது.
எனவே எங்களுடன் இணைந்து கிராம மட்டங்களில் செயற்படக்கூடிய வாய்ப்பை ஐக்கிய தேசியக்கட்சிக்கு வழங்க வேண்டும்.எமது நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கம் எவ்வாறு உள்ளதோ அதே போன்று மன்னார் மாவட்டத்தையும் முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கம் எமக்கு உள்ளது.அமைச்சர் றிஸாட் பதியுதீன் பாரிய அர்ப்பனிப்புக்களை மேற்கொண்டு இச் செயல் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.
மன்னார் மாவட்டத்தினை அபிவிருத்தி செய்யும் சகல பொறுப்புக்களையும் அவர் தான் முன்னெடுத்து வருகின்றார்.தற்போது குறித்த அபிவிருத்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
றிஸாட் பதியுதீனினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் மிக விரையில் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ளது.
இந்த மாவட்டத்தை முன்னெற்றுவதற்கான சில அபிப்பிராயங்கள் எங்களிடம் காணப்படுகின்றது.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் கருத்துக்களை முன் வைத்துள்ளோம்.அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்கள் தான் தலைமை தாங்கி முன்னெடுத்துச் செல்லுகின்றார்.
மன்னார் மாவட்டத்தில் விவசாய மற்றும் மீன் பிடி அபிவிருத்திகள் காணப்படுகின்றது. அத்துறைகளையும், உள்ளாச பயணத்துறைகளையும் அபிவிருத்தி செய்யும் திட்டங்களையும் முன் வைத்தள்ளோம்.
மேலும் அதே போன்று உள்ளாச பயணத்துறைக்கான கேந்திர நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு திட்டங்களையும் ஏற்படுத்தி வருகின்றோம்.
இங்கு காணப்படுகின்ற மாவட்டச் செயலகம் அதே போன்று அரச நிறுவனங்கள் உள்ளாச பயணத்துறையை அபிவிருத்தி செய்ய காணப்படுகின்றது.
குறிப்பிட்ட இடங்களில் மட்டும் உள்ளாச துறையினை அபிவிருத்தி செய்ய முடியாது.மன்னார் நகர உள்ளாச பயணத்துறைக்கான ஒரு கேந்திர நிலையமாக நாங்கள் மாற்றி இருக்கின்றோம்.
அதே போன்று பஸ் நிலையங்கள் சந்தைக்கட்டிடங்கள் போன்றவற்றை நாங்கள் நிர்மானிக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது.அதே போன்று சிலாபத்துறை நகரையும் கட்டி எழுப்ப வேண்டிய நிலை காணப்படுகின்றது.
அங்கே உட்கட்டமைப்பு வசதிகளையும்,அபிவிருத்திகளையும் மேற்கொள்ளுவதற்கான அங்கீகரத்தையும் வழங்கியுள்ளோம்.அதன் அடிப்படையிலேயே தான் இந்த நகரை முன்னேற்றி கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
மேலும் புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க தயாராக இருக்கின்றோம்.அவர்களுக்கான சுய தொழில் ஊக்குவிப்புக்களை அமைச்சர் றிஸாட் பதியுதீன் ஆரம்பித்துள்ளார்.
அதனை உறுதிப்படுத்தி இன்னும் விஸ்தரிப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.
மேலும் இங்கிருந்து இந்தியா மற்றும் புத்தளத்திற்கு இடம் பெயர்ந்து சென்றவர்களையும் மீள் குடியேற்ற வேண்டிய பிரச்சினை இருக்கின்றது.
இவர்களை மீள் குடியேற்றி இவர்களுக்கான சுய தொழில்களை வழங்கி வருமானத்தைஈட்டக்கூடிய வழி வகைகளையும் மேற்கொள்ள உள்ளோம்.
இதற்காகவே பொருளாதார அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
பல்வேறு பாரிய வேளைத்திட்டங்கள் எம்மிடம் இருக்கின்றது.அதற்கு தேவையான நிதிகளை பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரே கட்சி ஐக்கிய தேசியக்கட்சியே.உங்களின் எதிர்காலத்தை ஏற்படுத்த முடியும் ஐக்கிய தேசியக்கட்சியினால்.என மேலும் தெரிவித்தார்.