நாவலப்பிட்டியில் மாமியாரை பொல்லால் அடித்துக் கொலை செய்த மருமகனுக்கு பொலிஸார் வலைவீசியுள்ளனர்.
நாவலப்பிட்டி, நவ திஸ்பன கிராம பகுதியைச் சேர்ந்த அனுலாவத்தி (65) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டார்.
குடும்பத் தகராறொன்றையடுத்து, சந்தேக நபர் தனது மனைவியின் குடும்பத்தினரைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.அதன்படி, நேற்று (30) மாலை 6 மணியளவில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மருமகன், மாமியாரை மண்வெட்டி கணையினால் தாக்கியுள்ளார்.
காயமடைந்த மாமியார் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1.00 மணியளவில் உயிரிழந்தார்.சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிஸார், கொலையாளியைத் தேடி வலை விரித்துள்ளனர்.