லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்குகளை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் மாத்திரமல்லாது ஏனைய நீதிமன்றங்களிலும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியும் விதமாக சட்டத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டுவர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இது தொடர்பில் கொண்டுவரப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்தப் பரிந்துரையின் கீழ் லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான சட்டம் மறுசீரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.