முன்னாள் நிதி அமைச்சர் ரவியை கைது செய்ய சதித் திட்டம்- பந்துல

263 0

உள்ளுராட்சி சபைத் தேர்தலின் இறுதிக் காலகட்டத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை அவரது சுய விருப்பத்தின் பேரில் கைது செய்து தேர்தல் லாபம் தேட சதித் திட்டமொன்று தீட்டப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சி சார்பு பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவடைந்தவுடன் அவரை விடுவிக்கவும் ரவி கருணாநாயக்கவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பத்தரமுல்லை, நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான காரியாலயத்தில் இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment