மஹிந்தவிற்கு மிகவும் நெருக்கமான இராணுவ உயர் அதிகாரியும் பாதுகாப்பிலிருந்து நீக்கம்

4581 17

52881f287760cமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு மிகவும் நெருக்கமாக செயற்பட்டு வந்த உயர் பாதுகாப்பு அதிகாரியும், பாதுகாப்புப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன்படி மஹிந்த ராபஜக்ஸவிற்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு முற்றிலுமாக அகற்றிக்கொள்ளப்பட்டுள்ளது.

மஹிந்தவிற்கு மிகுந்த விசுவாசம் மிக்க உயர் இராணுவ அதிகாரியாக கருதப்படும் பிரதம பாதுகாப்பு அதிகாரி கேர்ணல் மகேந்திர பெர்னாண்டோ மற்றும் நெவில் வன்னியாரச்சி உள்ளிட்ட ஐந்து உயர் இராணுவ அதிகாரிகளும் மஹிந்தவின் பாதுகாப்பு பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஐந்து உயர் இராணுவ அதிகாரிகளும் நேற்றைய தினம் இராணுவத் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.மஹிந்தவின் ஜப்பான் விஜயம் வரையில் காத்திருந்த அரசாங்கம், அதன் பின்னர் குறித்த உயர் அதிகாரிகளையும் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளது.

Leave a comment