நான்கு மணிநேரத்தில் 5,385 ஏகப்பட்ட குற்றச் சம்பவங்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் !

261 0

நாடளாவிய ரீதியில் நேற்று (30) இரவு நடத்தப்பட்ட நான்கு மணிநேர திடீர் சோதனையில், ஏகப்பட்ட குற்றச் சம்பவங்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

அண்மைக் காலமாக இரவு நேரங்களில் பொலிஸாரும் போக்குவரத்துப் பொலிஸாரும் இணைந்து திடீர் தேடுதல் வேட்டைகளை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் இதுபோன்ற தேடுதல் நடவடிக்கைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, நேற்றும் நாடு முழுவதும் திடீர் வாகன சோதனைகள் நடத்தப்பட்டன. இதில், பல்வேறு குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1670 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர்.

அத்துடன், மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் ஐந்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தவிரவும் 3715 போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பான சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

Leave a comment