உலகம் முழுவதும் சுமார் 250 கோடி பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.”தி லேன்செட் இன்ஃபெக்ஷியஸ் டிசீசஸ்” என்ற மருத்துவ இதழில் உலக அளவில் சுமார் 250 கோடி பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நைஜீரியா உள்ளிட்ட நாடுகளி்ல் உள்ள மக்களுக்கு அதிக அளவில் பரவ வாய்ப்பு உள்ளதாக இந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜிகா வைரஸ், கர்ப்பத்தில் இருக்கும் சிசுக்களுக்கு மூளைப் பாதிப்பை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.