மனிதர்களை போல எலி சோப்பு போட்டு குளிக்கும் வித்தியாசமான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
பெரு நாட்டைச் சேர்ந்த டி.ஜே. ஜோஸ் கோரி என்பவர் தனது வீட்டு குளியலறையில் ஒரு வித்தியாசமாக காட்சி ஒன்றைக் கண்டார். அங்குள்ள தண்ணீர் தொட்டியில் எலி ஒன்று சோப்பு நீரால் தனது உடலை சுத்தம் செய்து கொண்டிருந்தது. இதைப்பார்த்த ஜோஸ் அந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
மனிதர்களை போல் எலி உடல் முழுவதும் சோப்பு தேய்த்து குளிக்கும் வித்தியாசமான வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 37 லட்சம் பேர் வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.
இந்த வீடியோவை பார்க்கும் சிலர் இது கிராபிக்ஸாக இருக்கலாம் என கருதுகின்றனர். சில வல்லுனர்கள் எலி தனது உடல் மீதிருந்த சோப்பு நீரை துடைக்க முயன்ற போது அது குளிப்பது போல் தெரிகின்றது என கூறினர்.