வழக்கு மேல் வழக்கு: ரத்து செய்யக்கோரி நவாஸ் ஷெரீப் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

354 0

தன் மீதான ஊழல் வழக்கில் மேலும் கூடுதல் வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு தடை கோரி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் சட்ட விரோதமாக வரி ஏய்ப்பு செய்து சொகுசுத் தீவில் சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பது தொடர்பான ஆவணங்கள் பனாமா ஆவணங்கள் என்ற பெயரில் வெளியாகி பரபரப்பினைக் கிளப்பியது.

இந்த ஆவணங்களில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் குடும்பத்தினரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதையடுத்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தால் நவாஸ் ஷெரிப் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி அவர் பதவி விலகினார். அவர் மீது விரிவான விசாரணை நடத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. இதன்படி நவாஸ் ஷெரிப்புக்கு எதிரான ஊழல் வழக்கு அந்நாட்டு தேசிய பொறுப்புடமை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நவாஸ் ஷெரீப் முதலீடு செய்து இருப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில், நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக துணை வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள, நீதிமன்றம் இதில் விசாரணையும் நடத்தி வருகிறது.

இதற்கிடையில், தனக்கு எதிரான கூடுதல் வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று தேசிய பொறுப்புடமை  நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரீப் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது  இந்த மனுவை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Leave a comment